வாரிசு நடிகருக்கு வாழ்த்து கூறிய விஜய் பட இயக்குநர்
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (15:24 IST)
தமிழ் சினிமாயில் சக்கரக்கட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஷாந்தனு. இவர் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுகிற நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜின் மகன்.
இவர் இன்று தனது 34 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஷாந்தனு பாக்கியராஜிற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தமிழ் சினிமாவில் குரூப்பிஸன் உள்ளது என சாந்தனு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.