போயும் போயும் மீரா மிதுனை பார்த்து காப்பியடித்தாரா விஜய்...?

திங்கள், 16 மார்ச் 2020 (12:03 IST)
கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார். பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பரவலாக மக்கள் மனதில் இடம் பிடித்த மீரா மிதுன் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்தவகையில் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தின் போஸ்டர் தன்னை பார்த்து காப்பியடித்து என கூறியுள்ளார்.  


இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு கிங்பிஷர் ராம் வாக் நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட. புகைப்படமொன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் விஜய் போன்றே வாயில் கை வைத்து உஷ்ஷ்ஷ்... என்று சொல்வதுபோல் உள்ளது. இதனை கண்ட விஜய் ரசிகர்கள் "யார் யாரை பார்த்து காப்பியடிப்பது..? என காண்டாகி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Who copied Whom

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்