இந்த ஆண்டிற்கான ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி விறுவிருப்பன பிலே ஆப் சுற்றை எட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நேற்று சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில், முதலில் ஆடிய சிஎஸ்கே 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது.
சென்னை அணி மும்பை அணியிடம் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதால் சென்னை அணியை மும்பை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் "கிளம்பு கிளம்பு, ஃபைனலுக்கு வந்தாலும் அடி தான் வாங்க போறீங்க" என்று கிண்டலாக பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவை கண்டு கடுப்பான நடிகை விஜயலக்ஷ்மி, "அட பாவி, தமிழ் பேசுற, தளபதி சூர்யான்னு சொல்ற. மும்பை இண்டியன்ஸ் ரசிகரா. ஃபைனலுக்கு வந்துட்டு நாங்க பேசுவோம் . அதுவரைக்கும் நீங்க சத்தமா பேசிகோங்க" என்று பதில் ட்வீட் செய்துள்ளார். இப்படி விஜயலக்ஷ்மி மட்டுமல்லாமல் பலரும் அந்த நபரை திட்டி வருகின்றனர்.