கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்காக இதுவரை நடிகர், நடிகைகள் கேரள முதல்வரின் நிவாரண நிதியாக லட்சக்கணக்கில் வழங்கி வரும் நிலையில் நடிகர் விஜய் மட்டும் வித்தியாசமாக கேரள மக்களுக்கு நேரடியாக நிதியுதவி சென்று சேரும் வகையில் நிதியுதவி செய்துள்ளார்.
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக்கணக்குகளில் விஜய் தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.70 லட்சம் அனுப்பியுள்ளார். இந்த பணம் உடனடியாக அந்தந்த பகுதி மக்களிடம் உடனடியாக நேரடியாக சென்றடையவுள்ளது. முதல்வரிடம் நிவாரண நிதியாக கொடுத்தால் அது பலகட்டங்களை தாண்டித்தான் மக்களிடம் செல்லும். ஆனால் விஜய் செய்யும் இந்த உதவி அவரது ரசிகர் மன்றத்தினர் மூலம் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைகிறது.