ஹெச் வினோத்தை லிஸ்ட்டில் இருந்து தூக்கிய விஜய்? ஏன் தெரியுமா?

திங்கள், 7 மார்ச் 2022 (14:43 IST)
இயக்குனர் ஹெச் வினோத் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர்.

சதுரங்கவேட்டை படத்தின் மூலம் அறிமுகமான ஹெச் வினோத் அந்த படத்திலேயே தனது முத்திரையைப் பதித்து முன்னணி ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்த்தார். அடுத்து அவர் கார்த்தியை வைத்து இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து அஜித்துடன் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றினார்.

இதில் வலிமை படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ரிலிஸுக்கு பின் வசூலில் ஜொலித்தாலும், விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் அவர் அடுத்ததாகவும் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இந்நிலையில் விஜய் தனது அடுத்த பட இயக்குனர்கள் பட்டியலில் ஹெச் வினோத்தை ஒருவராக வைத்திருந்ததாகவும், ஆனால் வலிமை விமர்சனங்களால் இப்போது அவரை அந்த பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்