விஜயின் 61 வது படத்தின் பெயரும், போஸ்டரும் நேற்று படக்குழுவால் வெளியிடப்பட்டது. இது மிகுந்த வரவேற்பை பெற்றாலும், அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சம் ஒன்று விஜய் அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்வியை உருவாக்குகிறது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என ரஜினியை போல ரொம்ப காலமாக தேர்தல் வரும்போது எல்லாம் கிசுகிசுக்கப்படும். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் விருது வழங்கும் விழா ஒன்றில் விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசியது அவர் அரசியலுக்கு வருவதற்காகத்தான் இப்படி பேசியிருப்பார் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.
இந்த சூழ்நிலையில் நேற்று விஜயின் 61-வது படத்தின் பெயர், போஸ்டர் வெளியிடப்பட்டது. மெர்சல் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் பெயருக்கு முன்னால் இளைய தளபதி என்பதற்கு பதிலாக தளபதி என குறிப்பிடப்பட்டுள்ளது.