விஜய் ஆண்டனியின் அடுத்த பட ஷூட்டிங் இங்குதான் நடக்க உள்ளதாம்!

வெள்ளி, 30 ஜூலை 2021 (10:45 IST)
இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வட இந்தியாவில் நடக்க உள்ளதாம்.

விஜய் ஆண்டனி தற்போது ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதில் பிச்சைக்காரன் 2 படத்தில் அவர் நடித்து வருவதோடு இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக வட இந்தியாவில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஜய் மில்டனின் 10 எண்றதுக்குள்ள படத்தின் படப்பிடிப்பு வட இந்தியாவில்தான் நடந்தது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்