'விஜய்-66 'பட முக்கிய தகவல்..விஜய் ரசிகர்களை கவர இயக்குநர் புதிய திட்டம்!

செவ்வாய், 1 மார்ச் 2022 (20:51 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது விஜய்66 படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.  பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி  இப்படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய்யுடன் தில் ராஜூ மற்றும் வம்சி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள படக்குழுவினர் 'தளபதி66' திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்.

இவர் 'விஜய்66' படத்தில் அவருடன் தமன் முதன்முறையாக இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், 'விஜய்66' படத்தின் கதை குறித்து இயக்குநர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விஜய்-ஐ முதன் முதலாக நான் பார்த்த போது, பணிவுடன் இருந்தார். அவரது நடிப்பில் நான் இயக்கவுள்ள புதிய படம் அரசியல் படம் அல்ல; ஆக்சன் படமும் அல்ல; இது ஒரு எமோசனல் படம் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், இப்படம் மனித உறவுகள் மற்றும் உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டது எனவும்  நடிகர்  விஜய்யிடம் இருந்து தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிப்பேன் என இயக்குநர் வம்சி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்