'ஷவர்மா' சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு....கடைக்கு சீல் !

திங்கள், 2 மே 2022 (15:32 IST)
கேரள மாநிலம் காசர் கோடு அருகே 'ஷவர்மா' சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கேரள மா நிலம் காசர்கோடு அருகே கரிவல்லூரில் உள்ள ஒரு கடையில் சில மாணவியர் ஷவர்மா என்ற அசைவு உணவு சாப்பிட சென்றனர். அதைச் சாப்பிட்ட அனைவரும் மயங்கி விழுந்தனர். பின்னர் அங்குள்ளவர்கள் அவர்களை  மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் தேவானதா (16 என்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்ற மாணவிகளுக்கு தீவிரர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதையடுத்து,  மாணவியர் சாப்பிட்ட கடைக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்