தன் மாமியாரை வாழ்த்தியதற்கு தகாத வார்த்தையில் திட்டிய நபர் - விக்னேஷ் சிவன் கூல் ரிப்ளை!

வியாழன், 14 மே 2020 (13:59 IST)
நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள் என்பதும் இருவரும் கணவன் மனைவி போலவே வெளிநாடுகள் உட்பட பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே. இருப்பினும் அதிகாரபூர்வமாக இன்னும் இருவருக்கும் திருமணம் நடைபெறவில்லை என்பதும் விரைவில் இவர்களது திருமணம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் அம்மாவிற்கு அன்னையர் தின வாழ்த்துக்களை கூறியிருந்தார். அதனை கண்ட இணையவாசி ஒருவர் " உங்க அம்மாவிற்கு வாழ்த்து சொல்லு" என்று தகாத வார்த்தையால் அவரை திட்டியிருந்தார்.


அவருக்கு ரீப்ளை செய்த விக்னேஷ் சிவன்,  " வாழ்த்துக்கள் கூறிவிட்டேன் ப்ரோ. உங்களுக்கும் Happy Mothers Day.. உங்களை போன்ற ஒரு அழகான, மரியாதை தெரிந்த, இரக்க மனம் கொண்ட ஒருவரை அவர் பெற்றெடுத்துள்ளாரே" என மறைமுகமாக முகத்தில் அடித்தாற்போல் கூல் ரிப்ளை செய்த விசிக்னேஷ் சிவனை பலரும் பாராட்டியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்