விடுதலை 2 ஷூட்டிங் எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

திங்கள், 10 ஏப்ரல் 2023 (08:28 IST)
மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டும் இல்லாமல் திரையுலகைச் சேர்ந்தவர்களும் கூட பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். ஆனால் பள்ளி தேர்வுகள் மற்றும் ஐபிஎல் போன்றவற்றால் படத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகள் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மே மாதத்தில் மீதமுள்ள காட்சிகளை தொடர்ந்து 20 நாட்கள் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்