ஐ ஆம் வெயிட்டிங்… விடுதலை படத்தை பாராட்டி ரஜினிகாந்த் ட்வீட்!

சனி, 8 ஏப்ரல் 2023 (15:30 IST)
கடந்த வாரம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டும் இல்லாமல் திரையுலகைச் சேர்ந்தவர்களும் கூட பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்த படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இப்போது படத்தைப் பார்த்துள்ள நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் படத்தைப் பற்றி டிவிட்டரில் “விடுதலை... இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்! சூரியின் நடிப்பு பிரமிப்பு. இளையாராஜா இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் தமிழ்த் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.” எனப் பாராட்டியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்