மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக தளபதி 65 இருக்கிறது. இந்த படத்துக்கான கதாநாயகிகள் தேர்வு மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு எல்லாம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. கதாநாயகியாக பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா, நகைச்சுவை பாத்திரத்தில் யோகி பாபு ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.