தனுஷுடனான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். மற்றுமொரு கதாபாத்திரத்தில் இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் நடிக்கிறார்.
இப்போது வரை கிட்டத்தட்ட 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குனருக்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. தான் சொன்னபடி நடிக்காமல் தன் இஷ்டத்துக்கு நடித்ததால் அனைவரின் முன்பும் வெற்றிமாறன் விஜய் சேதுபதியைக் கடிந்துகொண்டுள்ளாராம்.