கோட் படத்தில் விஜயகாந்த் கதாபாத்திரம் பற்றி பேசிய இயக்குனர் வெங்கட்பிரபு!

vinoth

செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (09:34 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தற்போது விறுவிறுப்பாக பரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. சமீபத்தில் படம் சென்சார் செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றது. படத்தின் ஓடும் நேரம் 3 மணிநேரம் 3 நிமிடம் என தெரியவந்துள்ளது. இன்னும் இரண்டு படம் ரிலீஸாகவுள்ள நிலையில் படத்துக்கான ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது படத்துக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி படம் பார்க்கும் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. படத்தில் அவரது கதாபாத்திரம் பற்றி பேசியுள்ள இயக்குனர் வெங்கட்பிரபு “படத்தில் கேப்டன் வரும் இடம் மயிர்க்கூச்செறியும் தருணமாக இருக்கும். அவர் இருக்கும்போதே அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி பண்ணவேண்டும் என நினைத்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் தவறிவிட்டார்.அவர் வரும் இடம் அவர் ரசிகர்களுக்குப் புல்லரிக்கும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்