சி எஸ் கே ரெஃபரன்ஸ் இருப்பதால் ரசிகர்களுக்கு கோட் பிடிக்கவில்லையா?... இயக்குனர் வெங்கட்பிரபு பதில்!

vinoth

செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (06:53 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையில் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவில் படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இந்த படம் வசூலில் கலக்கி வருகிறது. நான்கு நாட்களில் உலகம் முழுபதும் 288 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் பல சர்ப்ரைஸ் தருணங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்திருக்கும் நிலையில் கேரளா, ஆந்திரா மற்றும் இந்தி பேசும் மாநிலங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன.

அதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது படத்தில் இடம்பெறும் சி எஸ் கே சம்மந்தப்பட்ட காட்சிகள். இதுபற்றி பேசியுள்ள இயக்குனர் வெங்கட்பிரபு “படத்தில் சி எஸ் கே ரெஃபரன்ஸ் இருப்பதால் வெளிமாநில ரசிகர்களுக்குப் படம் பிடிக்கவில்லை போல. நான் சி எஸ் கே அணிக்கு சாதகமாகக் காட்சிகள் வைத்திருப்பதால் மும்பை மற்றும் பெங்களூர் ரசிகர்கள் ட்ரோல் செய்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்