அந்த படத்துக்கு யாரு இசை…. பிரேம்ஜியை மொய்க்கும் ரசிகர்கள்!

வியாழன், 7 ஏப்ரல் 2022 (09:34 IST)
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தைப் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியாகி கவனத்தைப் பெற்றது.

மாநாடு வெற்றிக்குப் பிறகு வெங்கட்பிரபு இப்போது இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியுள்ளார். இதையடுத்து அவர் இயக்கிய அடல்ட் காமெடி படமான மன்மத லீலை ஏப்ரல் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது.
அதையடுத்து இப்போது நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தை அவர் இயக்க உள்ளதாக அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. தயாரிப்பாளர் மற்றும் நாக சைதன்யா ஆகியோரோடு வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த எந்த அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் இப்போது வெங்கட் பிரபுவி தம்பியான பிரேம்ஜி அமரனிடம் அந்த படத்துக்கு இசையமைக்கப் போவது யார்? நீங்களா? இல்லை யுவன் ஷங்கர் ராஜாவா? என்று கேட்டு வருகின்றனர். அது போலவே இந்த படத்துக்கு தமன் இசையமைக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்