வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோல்...?

வெள்ளி, 2 டிசம்பர் 2016 (16:17 IST)
சௌந்தர்யா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் இந்தி நடிகை கஜோல் நடிக்கக்கூடும் என்கின்றன தகவல்கள்.

 
தனுஷ் நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா இயக்குகிறார். தனுஷ், கதை, வசனம் எழுத தாணுவும், தனுஷும் இணைந்து படத்தை தயாரிக்கின்றனர்.
 
இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் இந்தி நடிகை ஒருவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. தற்போது அந்த வேடத்தில் கஜோல் நடிக்கலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. இன்னும் சில தினங்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்