கையில வெப்பனே இல்லாட்டியும் மாஸ்ண்ணா நீங்க..! – வாரிசு மூன்றாவது போஸ்டர்!

புதன், 22 ஜூன் 2022 (17:39 IST)
இன்று விஜய் பிறந்தநாளையொட்டி அவர் நடிப்பில் வெளியாக உள்ள வாரிசு படத்தின் மூன்றாவது போஸ்டரும் வெளியாகியுள்ளது.

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் “வாரிசு”. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இன்று விஜய் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் நேற்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. அதில் விஜய் கோர்ட் சூட்டுடன் அமர்ந்திருப்பது மட்டுமே இருந்தது. வெறும் போட்டோ போல இருந்த அது ஒருபக்கம் கொண்டாடப்பட்டாலும், இன்னொரு பக்கம் கிண்டலுக்கும் உள்ளானது.

இந்நிலையில் வாரிசு படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று காலை வெளியானது. குழந்தைகளுடன் விஜய் இருப்பதான அந்த போஸ்டர் பெரும் வரவேற்பை பெற்று வைரலானது, அதை தொடர்ந்து தற்போது மூன்றாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் விஜய் ஒரு பைக்கில் அமர்ந்திருக்கிறார். அவ்வளவுதான்.. ஆனாலும் அந்த போஸ்டர் மாஸாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்திற்கான மூன்று போஸ்டர்களிலுமே விஜய் கையிலோ அல்லது போஸ்டர் டிசைனிலோ எந்த ஆயுதமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#VarisuThirdLook pic.twitter.com/xgMg7pVSyg

— Vijay (@actorvijay) June 22, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்