நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக சமூக கருத்துக்களை தெரிவித்து வருவார் என்பது தெரிந்ததே. குறிப்பாக சமீபத்தில் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தைரியமாகக் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது அவர் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து மேற்கு வங்கம் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் வாட்டர் பாட்டில்களை கொடுத்து உதவியுள்ளார். தனது சேவ்சக்தி அமைப்பின் உறுப்பினர்களுடன் அவர் இந்த உதவியைச் செய்த நிலையில் இதற்கான அனுமதி அளித்த தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, இந்தியன் ரயில்வே ஆகியவற்றுக்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்
மேலும் பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து தான் வெளியே செல்ல வேண்டும் என்றும் தனி மனித இடைவெளியை இன்னும் சில மாதங்களுக்கு கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அரசு எடுக்கும் நடவடிக்கையுடன் பொதுமக்கள் தரும் ஒத்துழைப்பும் சேர்ந்தால் மட்டுமே கொரோனாவை நாம் வீழ்த்த முடியும் என்றும் வரலட்சுமி தெரிவித்துள்ளார். வரலட்சுமியின் இந்த கருத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது