வனமகன் ஐந்து நாட்களில் இத்தனை கோடி வசூலா?

வியாழன், 29 ஜூன் 2017 (10:33 IST)
விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா நடித்துள்ள படம் ‘வனமகன்’. கடந்த வாரம் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல  வரவேற்பை பெற்றுள்ளது. டார்ஜான் படத்தைப் போல, காட்டுக்குள்ளேயே பிறந்து வளர்ந்தவராக நடித்துள்ளார் ஜெயம் ரவி.
 
 
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் 50வது படம். இந்நிலையில் இப்படம் 5 நாள் முடிவில் ரூ 10 கோடி வரை தமிழகத்தில்  வசூல் செய்துவிட்டது. உலகம் முழுவதும் ரூ 14 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூல் செய்துள்ளது, இன்னும் சில தினங்களுக்கு  பெரிய படங்கள் இல்லாததால், இப்படம் ரூ.20 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்