இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்திற்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருந்த சூழலில் சமீபத்தில் வலிமை ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.
இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் ஏறத்தாழ முடிந்துவிட்ட நிலையில் நேற்றுடன் ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பு பணிகளும் முடிந்துள்ளதாம். மேற்கொண்டு இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகளை ஐரோப்பிய நாடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக இந்த மாத இறுதிக்குள் படக்குழு ஐரோப்பா பயணிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.