வலிமை ஸ்னீக் பீக் எப்போது? வெளியான அப்டேட்!

புதன், 9 பிப்ரவரி 2022 (09:50 IST)
வலிமை படத்தின் ஸ்னீக் பீக் காட்சி எப்போது வெளியாகும் என்பது பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருந்த வலிமை திரைப்படம் கொரோனா கட்டுப்பாடுகளால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலைமை சரியானதும் படத்தை மூன்று மொழிகளில் வெளியிட படக்குழு தயாராக உள்ளது. பிப்ரவரி 24 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படங்களுக்கு ப்ரமோஷனாக படத்தின் சுவாரஸ்யமான காட்சியை இணையதளங்களில் பட நிறுவனங்கள் வெளியிடுவது உண்டு. ஸ்னீக் பீக் என்று சொல்லப்படும் இந்த விளம்பர யுக்தியை வலிமை படக்குழுவும் செய்ய உள்ளதாம். ஆனால் மற்ற படங்களை போல அல்லாமல் படத்தின் ரிலீஸுக்குப் பின்னரே இணையத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்