வலிமை பட முதல் சிங்கில் ’நாங்க வேற மாதிரி’’பாடல் ரிலீஸ் !’

திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (22:39 IST)
அஜித் நடித்த ’வலிமை’ படத்தின் சிங்கிள் பாடல் இன்று இரவு வெளியாகும்  எனத் தகவல் வெளியான நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டர். இதனால் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வலிமை படத்தின் முதல் சிங்கில் பாடல் நாங்க வேற மாதிரி என்ற தகவல் வெளியானதால் இதுகுறித்த தகவல் இன்று மதியம் முதல் வைரலானது.

ஏற்கனவே வலிமை படத்தயாரிப்பாளர் கூறியபடி, நாங்க வேற மாதிரி’ என்று தொடங்கும் இந்த பாடலின் லிரிக் வீடியோ தற்போது  10.45மணிக்கு வெளியாகியுள்ளது.

இது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

வலிமை படத்தில் நடிகர் அஜித், ஹூமா குரேஷ், கார்த்திகேயா, புகழ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் ஆயுதபூஜை முன்னிட்டு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்