கொரோனா பேரிடர்… முதல்வரை சந்தித்து 5 லட்சம் அளித்த வைரமுத்து!

சனி, 15 மே 2021 (08:37 IST)
கொரோனா பேரிடரை சந்திக்க தமிழக முதல்வர் பொதுமக்களிடம் இருந்து நன்கொடை கேட்டு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து பொதுமக்கள் பலரும் தங்களால் இயன்றதை முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளித்து வருகின்றனர். அதுபோல பிரபலங்களும் கொரோனா நிவாரண நிதி அளித்துள்ளனர். முன்னதாக சூர்யா குடும்பத்தினர் 1 கோடியும், அஜித் 25 லட்சமும் அளித்திருந்தனர். அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து 5 லட்ச ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். முன்னதாக வைரமுத்து தனது திருமண மண்டபத்தை கொரோனா மருத்துவமனையாக மாற்றிக்கொள்ள அனுமதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்