சூரி படத்தின் ப்ரமோஷனுக்காக ஒன்றுசேர்ந்த சிவகார்த்திகேயன்& விஜய் சேதுபதி!

vinoth

செவ்வாய், 21 மே 2024 (11:42 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக நடித்து வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக ஆக்கினார். அந்த படத்தை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து சூரி தொடர்ந்து கதாநாயகனாகவே சில படங்களில் நடித்து வருகிறார்.

விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்களை முடித்த சூரி  அடுத்து நடிக்கும் கருடன் படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். இந்த படத்தில் சூரியுடன் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமார் நடித்துள்ளனர். இதனால் படத்தின் பட்ஜெட் அதிகமானதாக சொல்லப்பட்டது.

இந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ள நிலையில்  மே 31 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ள உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்