என்ன வற்புறுத்தி அந்த படத்துல இழுத்துவிட்டுட்டாங்க! கருடன் படம் குறித்து பேசிய சசிக்குமார்!

Raj Kumar

செவ்வாய், 21 மே 2024 (13:27 IST)
காமெடி நடிகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்சமயம் ஹீரோ நடிகராக மாறியிருப்பவர் நடிகர் சூரி. பொதுவாக காமெடி நடிகர்கள் அடுத்து திரைப்படங்களில் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள் என்றால் அந்த படங்களிலும் ஒரு காமெடி கதாநாயகனாகதான் அறிமுகமாவார்கள்.



சிவகார்த்திகேயன், சந்தானம் போன்ற நடிகர்கள் எல்லாம் ஆரம்பத்தில் அப்படிதான் கதாநாயகன் ஆனார்கள். ஆனால் சூரி ஒரு காமெடி நடிகராக இருந்தப்போதும் விடுதலை மாதிரியான ஒரு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் அவருக்கு பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது விடுதலை. அதனை தொடர்ந்து கொட்டுக்காளி திரைப்படத்தில் நடித்த சூரி தற்சமயம் கருடன் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கருடன் திரைப்படத்தில் நடிகரும் இயக்குனருமான சசிக்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் கருடன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சசிக்குமார் கூறும்போது, ”என்னிடம் இயக்குனர் கதையை சொன்னதுமே தயாரிப்பாளரை அழைத்து வந்து அட்வான்ஸை கொடுத்துவிட்டார்.

ALSO READ: பிரேம் நசீர் சாதனையை முறியடிக்க வேண்டும்: மோகன்லாலுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

ஏனெனில் நான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டேன் என இயக்குனர் நினைத்தார். அதனால் என்னிடம் கதை நன்றாக இருக்கிறதா என்று கூட கேட்காமல் படத்தில் கமிட் செய்தார். ஆனால் நான் வீட்டில் இருந்து கிளம்பும் போதே கதை கேட்கும் முன்னரே இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்.

சூரிக்காக இதில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் மனநிலையாக இருந்தது. நான் மட்டுமல்ல இங்கு கூடியிருக்கும் அனைவருமே சூரிக்காக இங்கு வந்தவர்கள்தான்” எனப் பேசியுள்ளார் சசிக்குமார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்