இந்நிலையில் தற்போது சக காமெடி நடிகரான வடிவேலு விவேக் மரணம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், என் நண்பனுக்கு இப்படி ஒரு மரணம் வந்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ரொம்ப நல்லவன் அப்துல் கலாம் ஐயா உடன் நல்ல நெருக்கமாக இருப்பான். அவனை பற்றி பேசும் போது துக்கம் தொண்டையை அடைக்கிறது. அவன் ஆன்மா நல்ல சாந்தியடையட்டும் என கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.