மீண்டும் ரஜினி படத்தில் வடிவேலு… நெல்சன் இயக்கத்தில் தரமான கூட்டணி!

புதன், 2 மார்ச் 2022 (12:14 IST)
இயக்குனர் நெல்சன் ரஜினி கூட்டணியில் உருவாகவுள்ள படம் குறித்த எதிர்பார்ப்பு இப்போதே அதிகமாக உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படமான தலைவர் 169 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளிவந்துள்ளது. ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார் என்பதும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்த படத்தில் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தபடத்தில் ரஜினியோடு வடிவேலு நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபகாலமாக நெல்சன் படங்களின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்து வருகின்றன. அவர் இயக்கத்தில் வடிவேலு நடித்தால் நகைச்சுவைக்கா பஞ்சம் இருக்கப் போகிறது. வடிவேலு கடைசியாக ரஜினியோடு குசேலன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்