எலக்சன் முடிந்த பின்னர் ரிலீஸ் ஆகும் ‘எலக்சன்’.. உரியடி விஜயகுமாருக்கு வெற்றி கிடைக்குமா?

Mahendran

திங்கள், 29 ஏப்ரல் 2024 (20:24 IST)
உரியடி விஜயகுமார் நடித்த எலக்சன் என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படம் அவருக்கு வெற்றி படமாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
உரியடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான விஜயகுமார் அதன் பின்னர் உரியடி 2 படத்தை படத்தில் நடித்தார் என்பதும் சமீபத்தில் கூட அவரது நடிப்பில் உருவான பைட் கிளப் என்ற படம் வெளியானது என்பது. 
 
இந்த நிலையில் விஜயகுமார் அரசியல்வாதி கேரக்டரில் நடித்து வந்த எலக்சன் என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படம் மே 17ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் எலக்சன் முடிந்த பிறகு உரியடி விஜயகுமாரின் எலக்சன் படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் மூலம் அவருக்கு வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
தமிழ் இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இசையில்  ஆதித்யா தயாரிப்பில் ‘எலக்சன்’ படம் உருவாகியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்