இந்த நிலையில், நேற்று நான்காவது நாளாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு,அன்புசெழியன் உள்பட ஒரு சில தயாரிப்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை தொடர்வதாக தகவல் வெளியானது.
இந்த சோதனையில் குறித்து, வருமான வரிசோதனை வெளியிட்ட அறிக்கையில், வருமான வரிச்சோதனையில், கணக்கில் வராத ரூ. 200 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், தயாரிப்பாளர் அன்புச் செழியனுக்குச் சொந்தமாக இடங்கள் மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் இருந்து தியேட்டர் வருமானத்தைக் குறைத்து, பல கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான ஆவணங்களும், பல நிறுவனங்களுக்கு கொடுத்த கணக்கில் வராத கடன் கள், பத்திரங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.