கோலி தடுமாறுகிறார் என்பதெல்லாம் சும்மா…. ஆதரவு தெரிவித்த ஜாம்பவான்!

வியாழன், 16 செப்டம்பர் 2021 (11:08 IST)
இந்திய அணியின் கேப்டன் கோலியின் பேட்டிங் கடந்த சில ஆண்டுகளாக மோசமாக இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு கடந்த சில ஆண்டுகளாக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டு சிறப்பாக அணியை வழிநடத்தி வருகிறார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரின் பேட்டிங்கில் ஒரு தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடக்க உள்ள டி 20 உலகக்கோப்பைக்கு பின் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு கோலி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தேசிய நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கோலி மீண்டும் தன்னுடைய பழைய பார்மை மீட்டெடுப்பதற்காக இந்த முடிவை அவரே விரைவில் அறிவிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அதை பிசிசிஐ மறுத்துள்ளது. இந்நிலையில் கோலி பற்றி பேசியுள்ள கபில்தேவ் ‘கோலி கேப்டன்சியால் தடுமாறுகிறார் என்பதை நான் ஏற்கமாட்டேன். ஏனென்றால் அவர் கேப்டன்சியில் தான் சிறப்பாக செயல்பட்டார். அவர் இரட்டை சதங்களை அடித்த போதெல்லாம் இதைப் பற்றி யாரும் பேசவில்லை. அவர் தன் ஆட்டத்திறனுக்கு திரும்பினால் 100, 200 என்ன 300 ரன்கள் கூட அடிப்பார். அவரிடம் அபாரமான உடல் தகுதி உள்ளது. அவர் களத்தில் நிற்கவேண்டும் அவ்வளவே.’ எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்