சட்டசபை தேர்தல் மற்றும் கொரோனா ஊரடங்கால் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அதையடுத்து இப்போது நிலைமை சரியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பை நடத்தினார் மகிழ் திருமேனி. இந்த படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி ரிலீஸ் ஆன நிலையில் தற்போது அவரின் அடுத்த ரிலீஸாக மகிழ் திருமேனி திரைப்படம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு பற்றிய தகவல் ஒன்று இப்போது திரைவட்டாரத்தில் பரவி வருகிறது. இந்த படத்துக்கு கழகத் தலைவன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியில் இப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படும் நிலையில் கழகத் தலைவன் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.