பேட்ட, விஸ்வாசம் இரண்டு படங்களுமே வெற்றி பெற்று தயாரிப்பாளர்களுக்கும், விநியோகிஸ்தர்களுக்கும் லாபத்தை கொடுத்த போதிலும் பேட்டையை விஸ்வாசம் வீழ்த்திவிட்டதாக டுவிட்டுக்கள் பதிவாகின. அன்று முதல் இன்று வரை அஜித் ரசிகர்கள் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்வதும், ரஜினி ரசிகர்கள் அதற்கு பதிலடி கொடுப்பதுமாக இருந்தனர்.
இந்த நிலையில் இன்று திடீரென #அன்புள்ள_ரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக்கும், #ThalaFansRespectThalaivar என்ற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது. இந்த ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்களும் ஷேர் செய்து வருவது தான் ஆச்சரியத்தின் உச்சத்தை அடைய வைத்துள்ளது, திடீரென ஒரே நாளில் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் திருந்துவிட்டார்களா? என்றே எண்ணத்தோன்றுகிறது