கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து நாடுகளும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் உலகின் பெரும்பகுதி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு பொழுதுபோக்காக நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற ஸ்ட்ரீமிங்க் தளங்கள் இருந்து வருகின்றன. உலக அளவில் முன்னணி ஓடிடி நிறுவனமாக நெட்பிளிக்ஸ் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் மேலும் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக வார இறுதி நாளில் இலவசமாக தங்கள் சேவையை வழங்க உள்ளது. சொல்லப்படுகிறது.அதன் படி இந்தியாவில் உள்ள எவரும் டிசம்பர் 5 (இன்று) நள்ளிரவு 12 மணி முதல் டிசம்பர் 6 (நாளை) இரவு 12 மணி வரை இரு நாள்களுக்கு நெட்ஃபிளிக்ஸை இலவசமாக பயன்படுத்தலாம். இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் நெட்பிளிக்ஸில் இருக்கும் கதைகள் மற்றும் படங்களைப் பற்றிய அறிமுகம் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளனர். விரைவில் இந்த சலுகை இந்தியாவில் இருந்து அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.