தங்கலான் படத்திற்கு சிக்கலா.? ரூ.1 கோடி டெபாசிட் செய்ய தயாரிப்பாளருக்கு பறந்த உத்தரவு.!

Senthil Velan

திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (11:57 IST)
தங்கலான் படத்தை வெளியிடும் முன் ஒரு கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால் திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவெல் ராஜாவை திவாலானவராக அறிவிக்க கோரி உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தை வெளியிடும் முன் ஒரு கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட்டது. மேலும் கங்குவா படத்தை வெளியிடும் முன் ரூ.1 கோடி டிபாசிட் செய்யவும் ஆணையிட்டது.
 
பணம் டெபாசிட் செய்தது குறித்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டுமென்று உத்தரவிட்ட நீதிமன்றம்,  வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்