திரிஷா கதாநாயகியாக நடித்த தி ரோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

திங்கள், 6 நவம்பர் 2023 (14:52 IST)
கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி திரிஷா கதைநாயகியாக நடித்த தி ரோட் திரைப்படம் ரிலீஸானது. இந்த படம் திரையரங்குகளில் பெரியளவில் ஓடவில்லை.

மதுரை அருகே மர்மமான இடத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதை அடுத்து அந்த வழக்கை விசாரணை செய்து வரும் த்ரிஷாவுக்கு சில திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன. இதனை அடுத்து அந்த விபத்து செயற்கையாக ஏற்படுத்தப்படுகிறது என்பதும் அதை ஏற்படுத்தியது யார் என்பதையும் திரிஷா எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே இந்த படத்தின் கதை.

இந்நிலையில் இப்போது ஆஹா தமிழ் ஓடிடியில் இந்த படம் நவம்பர் 10 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்