இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காவல் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய முதலமைச்சர் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்காததன் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து 36 மாதங்களாக கொலை, கொள்ளை உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்று புகார் தெரிவித்துள்ளார்
இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ள முடியாத அளவிற்கு சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர், சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இதுபோன்ற சட்ட ஒழுங்கு சார்ந்த சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.
எனவே தமிழக முதலமைச்சர் தமிழக காவல்துறைக்கு இனியாவது சுதந்திரம் வழங்கி இரும்புக்கரம் கொண்டு சமூக விரோதிகளை அடக்க வேண்டும் என்றும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட 36 மாதங்களில் சட்டத்தைக் காக்கக்கூடிய காவலர்களின் கைகளை விட சமூக விரோதிகளின் கைகளே ஓங்கி இருக்கிறது என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.