நண்பர்கள் கொடுத்த டிரீட்.. நீரில் மிதந்த இளைஞர் ... அதிர்ச்சி சம்பவம்

சனி, 22 ஆகஸ்ட் 2020 (20:59 IST)

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணியின் நண்பர் ஒருவர் புதிய செல்போன் வாங்கியுள்ளார்.  இதற்காக அவர் டிரீட் கொடுத்துள்ளார். இதில் மணி உள்ளிட்ட 5 பேர் மாவூர் நீர்த்தேக்கத்திற்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் திடீரென மணி தண்ணீரில் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளார்.  அப்போது அவர் மாயமானார். பின்னர் நண்பர்கள் தீயணைப்புத்துறையினருக்குத்தகவல் கொடுத்தனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மிதந்து கொண்டிருந்த மணியின் சடலத்தைக் கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்