இன்று மாலை தேசிய விருதுகள் அறிவிப்பு.. ஆர்.ஆர்.ஆர். விருதுகளை குவிக்குமா?

வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (11:10 IST)
2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளதை அடுத்து சூர்யாவின் ஜெய்பீம், எஸ்எஸ் ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர். ஆகியவை விருதுகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 
2021 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளன. தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஜெய்பீம், சார்பாட்டா பரம்பரை, கர்ணன் ஆகிய திரைப்படங்களும் தெலுங்கு திரைப்படங்களான ‘ஆர்.ஆர்.ஆர், புஷ்பா படங்களுக்கும் விருதுகள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
சூரியவம்ஷி, 83 போன்ற ஹிந்தி படங்களும் கடும் போட்டியில் உள்ளன. தமிழ் திரை உலகிற்கு அதிக விருதுகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பாக சிறந்த இயக்குனர் விருது மாரி செல்வராஜ் அல்லது ஞானவேல் ஆகிய இருவரில் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது 
 
சூர்யா, தனுஷ், ஆர்யா ஆகியோர்களில் ஒருவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்