டூலெட் படத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து

இன்று வெளியாகி உள்ள டூலெட் படம் வெற்றி பெற வேண்டும் நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 
தென்மேற்குப் பருவக்காற்று, ‘தாரை தப்பட்டை’, ‘பரதேசி’, ‘ஜோக்கர்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய  செழியன் இயக்குநராக உருவெடுத்துள்ள படம் டூலெட். ஆதிரா பாண்டிய லட்சுமி, ஷீலா ராஜ்குமார், தருண்பாலா, சுசீலா, சந்தோஷ் ஶ்ரீராம் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் ஏராளமான விருதுகளை வென்றுள்ளது. இன்று வெளியாகி உள்ள டூலெட்,  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 
இந்நிலையில் டூலெட் படம் வெற்றி பெற வேண்டும் என சிவகார்த்திகேயன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  சிவகார்த்திகேயன் டுவிட்டர் பக்கத்தில், செழியன் சார் இயக்கி உள்ள டூலெட் படம் பெறும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். நிறைய விருதுகளை  வென்றுள்ள டூலெட் படம், மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்