பெண்களின் சம உரிமைக்காக போராட வேண்டும்

செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (16:28 IST)
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் ஐநா சபையின் தென்னிந்திய பெண்கள் நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதனை முன்னிட்டு ரஜினிகாந்த் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


 
 
"என்னுடைய மகளான ஐஸ்வர்யா எப்போதும் தன்னுடைய சொந்த காலில் நிறுக்கும் அளவுக்கு தன்னம்பிக்கையும் ஆற்றலும் பெற்றவர். அவர் ஐநா உடன் இணைந்து பெண்களுக்கான சம உரிமைக்காக பணியாற்றுவது எங்களுக்கு பெருமைக்குரிய மற்றும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். 
 
பெண்களுக்கான சம உரிமைக்காக அவர் செய்துள்ள பணிகளை நான் பாராட்டுகிறேன். அவர் செய்யும் இப்பணிகளுக்கு நான் ஆதரவாக இருப்பேன். ஒரு தந்தையாக உலக நாடுகளுக்கான பெண்கள் அமைப்பின் இந்திய தூதுவராக ஐஸ்வர்யா நியமிக்கப்பட்டுள்ளது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. அவர் பெருமைக்குரிய இப்பணியில் இருந்து பெண்களுக்கான சம உரிமை மற்றும் முன்னேற்றத்துக்காக பணியாற்றவிருப்பது எனக்கு மகிழ்ச்சியே. 
 
சம உரிமை என்பது பெண்களுக்கான ஒரு பிரச்சனை மட்டும் அல்ல, அவர்களின் சம உரிமைக்காக நாம் அனைவரும் போராட வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும். பெண்களுக்கு வீடுகளிலும், அவர்கள் வேலை செய்யும் இடங்களிலும் சம உரிமை கிடைக்க வேண்டும்."
 
- இவ்வாறு தனது செய்தியில் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்