அதன் பின் சிறப்பு விமானம் மூலமாக திருப்பூர் வந்த அவரை கொரோனா சோதனை மேற்கொள்ள மாநகராட்சி அழைக்க வந்துள்ளது. ஆனால் அதற்கு மறுத்த அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர். பின்னர் அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி, அவர் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

இது சம்மந்தமாக தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது. இதனால் கடுப்பான சூர்யா அந்த தொலைக்காட்சி நிரூபரை மிரட்டும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு சம்மந்தப்பட்ட நபர் போலிஸில் புகார் அளிக்க, இப்போது சூர்யா மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(b), 500 and 506(2) என்ற ஆபாசமாக பேசுதல், அவதூறு பரப்புதல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று அவர் தனது வீட்டில் தூக்குமாட்டித் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவரைக் காப்பாற்றிய அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.