ஒரே நாளில் ரிலீஸ்… ஸ்பெஷல் ஷோ எப்போ? மெயின் ஸ்க்ரீன் யாருக்கு? – கிளம்பியது அடுத்த சர்ச்சை!

வியாழன், 5 ஜனவரி 2023 (08:57 IST)
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் விஜய்யின் வாரிசு திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வாரிசு படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் நள்ளிரவில் வாரிசு திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதியே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஸ்பெஷல் ஷோ இரு படங்களில் யாருக்கு முதலில் கொடுக்கப்படும், மல்டிப்ளக்ஸ் திரைகளில் மெயின் ஸ்க்ரீன் எந்த படத்துக்கு ஒதுக்கப்படும் என இப்போதே ரசிகர்கள் சமூகவலைதளங்களில் எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர். இது சம்மந்தமாக விநியோகஸ்தர்கள் மத்தியிலும் போட்டி தொடங்கியுள்ளதாக திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்