''இது என்ன ஜென்மம்?''.. நடிகர் தாடி பாலாஜி வீடியோ வெளியீடு

சனி, 19 ஆகஸ்ட் 2023 (18:37 IST)
சமீபத்தில்   நாங்குநேரியில்  சின்னத்துரை என்ற மாணவரை வீடுபுகுந்து தாக்கிய சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருத்தணி பள்ளி பூட்டுகளில் மனித கழிவுகளை பூசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு அரசியல் தலைவர்கள்,  சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் பற்றி நடிகர் தாடி பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

அதில், ''நேற்றைக்கு எல்லா  நியூஸ் சேனல்களிலும் ஒரு செய்தியை பார்த்தேன். அதைக் கேட்கும்போது  நமக்கு மிகவும் கூசுகிறது, அதில், திருத்தணி அருகேயுள்ள ஒரு அரசுப் பள்ளியில் இப்படி ஒரு கேவலமான விஷயம் நடந்துள்ளது. அதாவது, மனித கழிவை பள்ளி பூட்டுகளில்  பூசியுள்ளனர். 

இது என்ன ஜென்மம்? . நீங்கள் அந்தப் பள்ளியில் படித்திருக்கலாம், உங்கள் குழந்தைகள் அங்குப் படித்திருக்கலாம், குழந்தைகள் படித்து வருவதால் இதனால் அவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.  முதல்வர் மு.க.ஸ்டாலின்  மாணவர்களின் சாதனையை தன் சாதனையாக நினைத்துப் போற்றுகின்றார்.... எனவே  முதல்வர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. நான் விரையில் அந்தப் பள்ளிக்கு நேரில் வருகிறேன் ''' தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்