செம்பரம்பாக்கம், பூண்டி,புழல் சோழவரம் போன்ற ஏரிகளில் இருந்துதான் சென்னைமாநகருக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. முக்கியமாக வீரரணத்திலிருந்து குழாய் மூலம் சென்னைக்கு நீர் வருகிறது.
சென்னை மாநகரில் நாளொன்றுக்கு சுமார் 85 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்ற நிலையில் குடிநீர்வாரியம் சார்பில் 83 கோடி லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது அத்துடன் ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதி நீரும் இம்மாதக் கடைசியில் வரவுள்ளது என இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு சென்னையில் வராது என அதிகாரிகள் தீர்கமாகத் தெரிவித்துள்ளனர்.