ஏற்கனவே ஆரி, ரியோ, ஆஜித், ஷிவானி, அனிதா, சோம் மற்றும் அர்ச்சனா என ஏழு பேர் நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று ரியோ மற்றும் ஆரி ஆகிய இருவரும் சேவ் செய்யப்பட்டனர். இன்று ஷிவானி சேவ் செய்யப்பட்டதாக வந்த தகவலை அடுத்து ஆஜித், சோம், அனிதா மற்றும் அர்ச்சனா ஆகிய நான்கு பேர்கள் தற்போது டேஞ்சர் ஜோனில் உள்ளனர்.
இன்றைய முதல் புரமோ வீடியோவில் இன்று வெளியேறப் போவது ஒருவரா? அல்லது இருவரா? என கமல்ஹாசன் கேள்வி கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருந்தாலும் அர்ச்சனா இன்று வெளியேறுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று இரண்டாவதாக ஒருவர் எவிக்சன் செய்யப்படுவாரா என்பதை அடுத்தடுத்த புரமோவில் இருந்து தெரிந்து கொள்ளலாம்