ஐட்டம் பாடலுக்கு செம ஆட்டம் போட்ட பிக்பாஸ் ரியோ - ரெண்டிங் வீடியோ இதோ!

சனி, 19 டிசம்பர் 2020 (15:08 IST)
பானா காத்தாடி மற்றும் செம போதை ஆகாதே போன்ற படங்ககளை இயக்கிய இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் தற்போது நடிகர் ரியோவை வைத்து "பிளான் பண்ணி பண்ணனும்" என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.
 
சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளைஞர்களிடம் ஃபேமஸானவர் ரியோ ராஜ். அதில் கிடைத்த புகழை வைத்து சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து இல்லத்தரசிகளிடையேயும் படு பாப்புலர் ஆனார் ரியோ. அதையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியானநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ஹீரோவாக களமிறங்கினார். ஓரளவிற்கு ஓடி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்ற அப்படத்தை தொடர்ந்து தற்போது இன்னொரு இன்னிங்ஸை துவங்கியுள்ளார் ரியோ.
 
பாசிட்டிவ் பிரிண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரோபோ ஷங்கர், சந்தான பாரதி, ஆடுகளம் நரேன், முனீஷ்காந்த், பாஸ்கர் என்று ஏராளமானோர் நடித்துள்ளனர். இப்படம் மூலம் மூன்றாவது முறையாக பத்ரி வெங்கடேஷ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் பிளான் பண்ணி பண்ணணும் வீடியோ பாடலை ரியோ பிக்பாஸ் வீட்டில் இருந்தபடியே ரிலீஸ் செய்தார். தற்போது இந்த பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. ஐட்டம் பாடலான இதில் ரியோ கில்மா நடிகையுடன் செம குத்து போட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.... 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்