இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை சுசித்ராவை தொடர்ந்து கதறும் மடோனா செபாஸ்டியன்!

புதன், 8 மார்ச் 2017 (16:10 IST)
பாடகி சுசித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடும், திரைநட்சத்திரங்கள் குறித்த அந்தரங்க படங்கள், செய்திகள் தமிழகத்தின் ஹாட் டாபிகாக இருந்து வருகிறது. இந்த படங்களையும், செய்திகளையும் அவரே போடுகிறாரா இல்லை அவரது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா என்பது இன்னும் தெளிவுப்படுத்தப்படாத நிலையில் உள்ளது.

 
பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக அவரின் கணவர் கார்த்திக் தெரிவித்தார். ஹேக் செய்யப்பட்ட  கணக்கில் தனுஷ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகின. இந்நிலையில் மற்றொரு பிரபலத்தின் சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
 
நடிகை மடோனா செபாஸ்டியனின் ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், தான் சொல்லும் வரை தனது  ஃபோஸ்ட்டுகளை கண்டுகொள்ள வேண்டாம் என்றும் அவரே போஸ்ட் மூலம் தெரிவித்துள்ளார். முன்னதாக ஜல்லிக்கட்டு பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது பீட்டாவுக்கு ஆதரவு அளிப்பதற்காக விமர்சிக்கப்பட்ட நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் கணக்கு  ஹேக் செய்யப்பட்டது. 
 
சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு தற்போது ஹேக் செய்யப்பட்டது. தனது கணவர் கார்த்திக்கின் ட்விட்டர் கணக்கும் ஹேக்  செய்யப்பட்டுள்ளதாக சுசித்ரா கூறினார். அதனை தொடர்ந்து தற்போது நடிகை மடோனா செபாஸ்டியனின் ஃபேஸ்புக் பக்கம்  ஹேக் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்படி அடுத்தடுத்து சினிமா பிரபலங்களின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்