“மிஷ்கின் எழுதிய சிறந்த கதை இதுதான்” - இயக்குநர் ராம்

செவ்வாய், 23 ஜனவரி 2018 (12:40 IST)
‘மிஷ்கின் எழுதிய சிறந்த கதை இதுதான்’ என ‘சவரக்கத்தி’ படத்தின் கதையைக் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் ராம்.
ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சவரக்கத்தி’. இயக்குநர்கள் ராம், மிஷ்கின், பூர்ணா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ‘பிசாசு’  படத்திற்கு இசையமைத்த அரோல் கரோலி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இதன் கதையை எழுதியிருப்பதோடு, தயாரிக்கவும் செய்துள்ளார் மிஷ்கின்.
 
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் பேசிய ராம், “இந்த உலகில் குடிக்க, அன்பைப் பற்றி பேச, படிக்க, கவலை மறக்க ஓர்  இடம் எனக்கு இருக்கிறது என்றால், அது மிஷ்கினின் அலுவலகம்தான். எல்லோரும் மிஷ்கின் தன்னுடைய அலுவலகத்தில் இத்தனை புத்தகங்களை வைத்துள்ளாரே... அதை படிப்பாரா என்று கேட்பார்கள்? அவர் நிஜமாகவே அனைத்தையும் வாசிப்பார். அவருக்கு அந்த நாளைக்கு எந்த புத்தகம்  தேவைப்படுகிறதோ, அதிலிருந்து ஒரு பக்கத்தை படிப்பார்.
 
என்னுடைய படத்திலும், மிஷ்கின் படத்திலும் நகைச்சுவை என்ற விஷயமே இருக்காது. ஆனால், இந்தப் படத்தில் மாறாக டார்க் காமெடி இருக்கும். என்னைப் பொறுத்தவரை மிஷ்கின் எழுதிய மிகச்சிறந்த கதை ‘சவரக்கத்தி’ தான். இந்தப் படத்தில் நடித்த அனுபவம் என்னை முழுமையான மனிதனாக மாற்றியுள்ளது”  என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்